முத்துராமலிங்கத் தேவர்
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்[1][2][3]. 1957 ஆம் ஆண்டு கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட இவர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment